அழகிய கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி !! காரணம் தெரிஞ்சா நெகிழ்ந்துபோவீங்க !! இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் !! செய்திகள்

பெண்களுக்கு கூந்தல் என்பது எத்தனை முக்கியம் என்பதை சொல்லத்தேவையில்லை. அதுதான் இந்தியப்பெண்களின் அழகாக பல இடங்களில் வர்ணிக்கப்படுகிறது. இதற்காக பலவிதமான ஷாம்புகள், எண்ணெய்கள் பயன்படுத்தி தங்கள் கூந்தல்களை பராமரிக்கிறார்கள். அந்தளவிற்கு பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாக கருதும் கூந்தலைமுழுவதுமாக மொட்டையடித்து தானமாக தந்துள்ளார் ஒரு பெண் போலிஸ் அதிகாரி. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 44 வயது பெண் போலிஸ் அதிகாரி அபர்ணா. இவர் தன் முடியை தானமாக கொடுத்தது கேன்சர் நோயாளிகளுக்காகத்தான்.

ஆம் கேன்சர் நோயின் கொடூரத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. நம்மை உருக்கி எடுக்கும் இந்த வியாதியை குணப்படுத்த கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் எடுக்கும்போது அவர்களின் முடி முழுவதுமாக கொட்டிவிடும் வாய்ப்புள்ளது.

இதனால் அவர்கள் விக் வைத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவர்களுக்காக பலரும் தங்கள் முடியை தானம் கொடுப்பது வழக்கமாகும். அதிகாரியான அபர்ணா மொத்தமாக மொட்டையடித்து தானம் செய்துள்ளார். நிச்சயம் இவரை பாராட்டியே ஆக வேண்டும்.