தமிழனுக்கு அ டித்த அதிர்ஷ்டம்! சத்தமில்லாமல் உயர்ந்த சுந்தர் பி ச்சையின் சொத்து மதிப்பு : எத்தனை கோடி தெரியுமா?

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 79சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த 2004-ஆகம் ஆண்டு சேர்ந்தார். பின்பு 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும் அதிகாரியாக உள்ளார்.

மேலும் கடந்த ஒரு வருடத்தில் இவரின் சொத்து மதிப்பு 79சதவீதம் உயர்ந்து 5,900கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது வெளிவந்துள்ள ஹூரன் ரிச் லிஸ்ட் -ல் குறிப்பிடப்பட்டது என்னவென்றால்,பணக்கார இந்தியத் தலைவர்கள் பட்டியலில் (Top 10 Richest Indian Professional Managers list) கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சுந்தர் பிச்சையைப் போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்லாவின் சொத்து மதிப்பு 5,900கோடி ரூபாய் என்பதால் பணக்கார இந்திய தலைவர்கள் பட்டியலில் இருவரும் 5வது இடத்தை பகிர்ந்துள்ளனர். இருந்தபோதிலும் சத்ய நாடெல்லாவின் சொத்து மதிப்பு இந்த வருடம் வெறும் 16சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.


Comments are closed.