மருத்துவமனை வாசலில் ச டலமாக மகன்!… நெ ஞ்சை பிடித்தபடி க தறும் தாயின் வீடியோ காட்சிகள்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தற்போது வரை 769,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21,161 பேர் உ யி ரி ழந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 31 வயது இளைஞர் கடந்த புதன்கிழமை பிற்பகல் தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெளியே சரிந்து இறந்து கிடந்த வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்த நபர், மூச்சு திணறல் காரணமாக ஈ.சி.ஐ.எல் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.அவர் 10 நாட்களுக்கு முன்பு இருந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்து மருத்துவமனையில் சுமார் 10 நிமிடங்கள் ஆக்ஸின் வழங்கப்பட்ட நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.அப்போது ஆம்புலன்சும் கிடைக்கவில்லை, ஆட்டாவில் செல்வதற்காக வெளியில் காத்திருந்த போது, குறித்த இளைஞன் சரிந்து உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த இளைஞருடன், சகோதரி மற்றும் தாயார் இருந்துள்ளனர். இது போன்ற அவசர நிலையில் யாரும் எங்களுக்கு உதவவில்லை என்று உயிரிழந்த இளைஞனின் சகோதரி வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் சந்தேகிக்கப்படும் நோயாளிகள், அனைவரும் அரசு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. அப்படி தான் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.