மளிகை ஜாமான் வாங்கச்சென்று மருமகளை வாங்கி வந்த மகன்..! அ திர்ச்சியில் தாய்..! ப ரபரப்பு சம்பவம்.! என்ன நடந்தது தெரியுமா..?
மளிகை ஜாமான் வாங்கிவருமாறு மகனை கடைக்கு அனுப்பிய நிலையில், மகன் வீடு திரும்பிய போது மனைவியுடன் வந்த சம்பவம் அந்த இளைஞரின் தாய் உட்பட பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கசியாபாத் பகுதியை சேர்ந்தவர் குட்டு. 26 வயதான குட்டு தனது தாயுடன் வசித்து வந்த நிலையில், கடைக்கு சென்று வீட்டிற்க்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிவருமாறு குட்டுவின் தாய் குட்டுவிடம் கூறி கடைக்கு அனுப்பியுள்ளார். கடைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத குட்டு சில மணிநேரம் கழித்து சவீதா என்ற இளம் பெண்ணை தன்னுடன் அழைத்து வந்து இவர் தான் என் மனைவி என்றும், இனி இவர் இங்குதான் இருப்பார் எனவும் தாயிடம் கூற அவர் என்ன நடக்கிறது என தெரியமால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் தனது மகன் மற்றும் அவர் அழைத்துவந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று என் மகனுக்கு நடந்த திருமணத்தை தன்னால் ஏற்று கொள்ள முடியாது என கூறி புகார் அளித்துள்ளார்.
போலீசார் குட்டுவிடம் நடத்திய விசாரணையில், குட்டுவுக்கும், சவீதாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே கோவிலில் காதல் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாகவும், தங்கள் திருமணத்திற்கு சரியான சாட்சிகள் இல்லாததால் திருமண பதிவு சான்றிதழை அப்போது தன்னால் வாங்க முடியவில்லை என குட்டு கூறியுள்ளார்.
தற்போது ஊரடங்கு என்பதால் சாட்சிகள் இருந்தும் தன்னால் சான்றிதழை வாங்க முடியவில்லை. அதேநேரம் என மனைவி தற்காலிகமாக தங்கியிருந்த வாடகை வீட்டை திடீரென காலி செய்ய சொல்லிவிட்டனர். அதனால் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
என்ன காரணம் கூறியும் குட்டுவின் தாய் இருவரையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதனால் சவீதா தங்கியிருந்த வாடகை விடுதியிலேயே இருவரையும் தங்கவைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.
Mother sends son to buy groceries, he returns with wife
Read @ANI Story | https://t.co/no1NZNCGLQ pic.twitter.com/xW9kT9e64H
— ANI Digital (@ani_digital) April 29, 2020
Comments are closed.