அப்பாவுக்காக மகள் செய்த அந்த ஒரு செயல் !! இப்படி ஒரு மகள் இல்லையே என ஏங்க வைக்கும் சம்பவம் !!
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் தான் ஒஸ்தி என்பது பலரது மனதிலும் ஆழமாக பதிந்திருக்கும் கருத்து.இன்னும் சில கிராமங்களில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் கொடூரமெல்லாம் நடக்கிறது.ஆண் குழந்தைகள் தான் தங்களின் வயோதிகத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ளும் என்றும், பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்க வேண்டியதே சுமையான விசயம் என்பதே பலரின் மனதிலும் பதிந்திருக்கும் கருத்து.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் தன் தந்தைக்காக ஒரு மகள் செய்த செயல் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்தியாவின் மூத்த தொழிலதிபர்களில் ஒருவரான ஆர்.பி.ஜி குரூப் நிறுவனத்தின் தலைவர் ஹார்ஸ் கொயாங்கோ இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அப்பா, மகளின் படத்தை பகிர்ந்து இருந்தார். அதுதான் உருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? அந்த பதிவில் 19 வயதே ஆன பெண் rakhi dutta. இவரது தந்தைக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டது. 19 வயதே ஆன அந்த பெண் தனது எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது 65 சதவிகித கல்லீரலைக் கொடுத்துள்ளார். இது மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. என குறிப்பிட்டுள்ளார். ஆண்குழந்தை தான் ஒஸ்தி என்னும் எண்ணம் கொண்ட பலநூறு பெற்றோர்களுக்கும் சேர்த்தே ஆனந்த யாழை மீட்டிருக்கிறாள் இந்த பெண்
Comments are closed.