தாசில்தாரை அரை மணி நேரமாக துரத்தி சென்ற பசு மாடு! காரணம் தெரிஞ்சா ஷாக்காகிடுவிங்க….

தாசில்தார் ஒருவரை பசு மாடு ஒன்று அரை மணி நேரம் விடாமல் துரத்திய காணொளிகள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அவர் காரை நிறுத்தினால் பசுமாடு காரின் முன்பு வந்து நின்று காரை அங்கிருந்து செல்ல முடியாத வண்ணம் செய்தது.இது மட்டுமன்றி கார் கண்ணாடி அருகே வந்து நின்று கொண்டும் காரை இயக்கும் போதும் தொடர்ந்து துரத்திக்கொண்டும் வந்ததுள்ளது.

 

இதுகுறித்து உள்ளூர் வாசிகள் கூறும் போது அப்பகுதியில் அப்பசு தங்கியிருந்த கொட்டகையை வேறு இடத்திற்கு தாசில்தார் மாற்றம் செய்தமையால் பசுவானது அவரை விடாமால் துரத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இது குறித்து தாசில்தார் கூறும்போது “ பசுவானது பாசத்தில் துரத்துகிறது. இப்படி பல நபர்களை இம்மாடு துரத்தியிருக்கிறது. இது ஒரு விதமான பாசம். கொட்டகையானது வேறு இடத்திற்கு மாற்றப்பட வில்லை”என்று தெரிவித்துள்ளார்.எனினும், ஒரு பசு தாசில்தாரை நீண்ட நேரம் துரத்திய காணொளி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Comments are closed.