கர்நாடகாவில் தாலியை அடகுவைத்து டிவி வாங்கிய பெண்..! எல்லாம் எதற்காக தெரியுமா..?

கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொ ரோ னா காரணமாக பள்ளி, கல்லூரிகள் இன்றும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க பள்ளி, கல்லூரிகள் தடுமாறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் பாடங்களை நடத்தி வருகின்றனர். தற்போது அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகள் கல்வி என்ற தொலைக்காட்சியை தொடங்கி அதன் மூலமாக பாடல்களை ஒளிபரப்பி வருகின்றன.

 

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் உள்ள கடாக் மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக தா லி யை அடமானம் வைத்து தொலைக்காட்சி வாங்கியுள்ளார்.
இந்த சம்பவம் ஊடகங்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கஸ்தூரி கூறியதாவது “கொ ரோ னா காரணமாக எனக்கும் என் கணவருக்கும் வேலை இல்லை அதனால் எந்த ஒரு வருமானமும் இல்லை இதனாலேயே எங்களுக்கு வேறு வழி தெரியாமல் தொலைக்காட்சியை வாங்கியுள்ளோம். இனி ஆன்லைன் வகுப்புகளை என்னுடைய குழந்தைகள் தொலைக்காட்சி மூலம் பார்த்து படிப்பார்கள்” என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

Comments are closed.