திருமணமாகமல் 750 படங்களுக்கு மேல் நடித்த கோவையின் மிரளவைக்கும் மறுபக்கம் தெரிந்தால் ஆச்சரியபடுவீங்க!!
நகைச்சுவை இளவரசி என, கோலிவுட் திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்படும், நடிகை கோவை சரளாவின் உண்மையான பெயர் சரளா குமாரி. இவர் பிறந்த ஊர் கோவை என்பதால் கோவை சரளா என அனைவராலும் பின்னாளில் அழைக்கப்பட்டார். அதுவே அவருடைய பெயராகவும் மாறியது.
இவருடைய அப்பா ஒரு ரா ணு வ அதிகாரி. தன்னுடைய தாய் – தந்தைக்கு கோவை சரளா கடைசி மகளாக பிறந்தார். மேலும் இவருக்கு 4 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். வயதிலேயே சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, பெற்றோரிடம் சினிமாவில் சேர்த்து விடும் படி .
பு ர ட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீ வி ர ரசிகையாக இவர், அவர் நடித்த படங்களை பார்த்து பார்த்து சினிமாவில் தனக்கான ஆ ர்வத்தை வளர்த்துக்கொண்டார். படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாத இவர், உள்ளூரில் உள்ள சிறு சிறு நாடகங்களில் நடிக்கவும் தொடங்கினார். எம்.ஜி.ஆர் தன்னுடைய கட்சி பணிக்காக ஒவ்வொரு முறையும் கோவை வரும்போதெல்லாம், அவருடைய பேச்சை கேட்ட வேண்டும் என, அ டி த்து பிடித்து மேடையில் வந்து நின்று, கை தட்டி ரசிப்பார். இதனை தொடர்ந்து கவனித்து வந்த எம்.ஜி.ஆர். ஒரு முறை கோவை சரளாவை அழைத்து, இப்படியெல்லாம் மேடையில் வந்து நிற்க கூடாது, படித்து முடித்தபின் தன்னை வந்து பார்க்கும் படி அறிவுரை வழங்கினார்.
5 பெண் குழந்தை, 1 ஆண் குழந்தை என, மொத்தம் 6 குழந்தைகளுடன் இவருடைய பெற்றோர் வ று மையில் வாடிய போது, அதை அறிந்த எம்.ஜி.ஆர் இவருடைய குடும்பத்திற்கு கல்வி உதவி தொகையும் வழங்கியுள்ளார். எம்.ஜி.ஆர் அளித்த கல்வி உதவி தொகை மூலம் படித்த இவர், பின்னாளில் தானும் அவரை போலவே மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும் என எண்ணினார்.9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, சில மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். அப்போது தான் இவருக்கு ‘வெள்ளி ரதம்’ என்கிற படத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர், தன்னுடைய உறவினரான இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.kovai 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கோவை சரளா, முந்தானை முடுச்சி படத்தில் 32 வயது க ர் ப்பிணி பெண் வேடத்தில் துணித்து நடித்திருந்தார்.
12 ஆம் வகுப்பு அவர் படித்து முடித்த பின், பெற்றோருடன் சென்னைக்கு வந்த கோவை சரளா, ஆழ்வார் பேட்டையில் 300 ரூபாய்க்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடும்பத்தோடு தங்கி பட வாய்ப்புகளை தேட துவங்கினார். சென்னைக்கு வந்ததும் உடனடியாக பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை, எனவே மீண்டும் கே.பாக்யராஜிடம் படவாய்ப்பு கேட்டார். அவரோ, தான் இயக்கி நடிக்க இருந்த சின்ன வீடு படத்தில், 18 வயதான கோவை சரளாவுக்கு 65 வயது அம்மா வேடம் கொடுத்தார். இதில் நடிக்க பிடிக்கவில்லை என்றாலும், இந்த படம் கோவை சரளாவிற்கு மிகப்பெரிய பிரேக் ஆக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தம்பிக்கு எந்த ஊரு, வைதேகி காத்திருந்தாள் என பல படங்களில் நடித்தார். எனினும், செந்தில்,கவுண்ட மணியுடன் இவர் நடித்த கரகாட்ட காரன் திரைப்படம் இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்று, காமெடி இளவரசியாக வலம் வர செய்தது.
Comments are closed.