கடற்கரையில் காதலனுடன் சிக்கினேனா?… ஜுலி கொடுத்த ப திலடி! வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார்!
நடிகை ஜுலி தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் என்று தீயாய் பரவி தகவலுக்கு, ஜுலி தனது தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனவர் ஜூலி. இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இதன் மூலம் மேலும் பிரபலமானார். ஏராளமான பொய்களைச் சொன்னதோடு, நடிகை ஓவியாவையும் கார்னர் செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது.
இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரசிகர்களின் கோ பத்திற்கும் ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலியை வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
பின்பு தொகுப்பாளினி, நடிகை என்று வலம் வரும் ஜுலிக்கும், தொழிலதிபரின் மகனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது என்று கூறப்பட்டு வந்தது. இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த ஜுலி தான் கடற்கரையில் போட்டோஷுட் எடுக்கப்பட்ட காணொளியினையும் வெளியிட்டுள்ளார்.
Comments are closed.