வெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அ தி ர் ச் சி யடைந்த அ திகாரிகள் !! அப்படி என்ன இருந்தது தெரியுமா ??
ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டது தற்போது வைரலாகி வருகிறது.அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அண்மையில் கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்வதற்காக அபுதாபி சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார்.
அதன் படி அங்கிருந்த அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை கண்ட அதிகாரிகள், அதில் இருந்த அவரின் விவரங்களைப் பார்த்து அ திர் ச்சி யடை ந் தனர்.
ஏனெனில், அதில் அவர் பிறந்த தேதி, 1896 எனவும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தது.அப்போ இவருக்கு வயது 124? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? என்று குழம்பி போன அதிகாரிகள் அவரிடமிருந்த மற்ற ஆவணங்களையும் சரி பார்த்த போது,
அதிலும் அதே பிறந்த திகதி சரியாக குறிப்பிட்டிருந்ததால், உடனடியாக அங்கிருந்த விமான ஊழியர்கள் நூறு வயதை தாண்டியவர் என்று அவரிடம் போட்டி போட்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.இதை அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய, தற்போது அவர் வைரலாகியுள்ளார்.
Comments are closed.