அப்பாவோடு கடலுக்கு போன சிறுவனுக்கு கிடைத்த பாட்டில்… பாட்டிலுக்குள் இருந்தது என்ன தெரியுமா? 50 ஆண்டு ஆ ச்சர்யம்..!

கடல் எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்த ஒன்று. அப்படியான ஒரு ஆச்சர்யம் இப்போது நிகழ்ந்துள்ளது. ஆம் அப்பாவோடு விடுமுறையில் கடலுக்கு போன சிறுவன் ஒருவன் இப்போது ஆச்சர்யத்தில் துள்ளிக் குதிக்கிறான்.
ஜியா எலியட் என்னும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொடியன் தன் அப்பா பால் என்பவரோடு, மேற்கு கடற்கரையில் மீன்பிடிக்கப் போய் இருக்கிறார். அப்போது சிறுவனின் கைக்கு எட்டும் தூரத்தில் கடலில் ஒரு பாட்டில் கிடந்தது. விளையாட்டுப்போக்கில் அதை எடுத்து பிரித்து படித்த சிறுவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த கடிதம், பிரித்தானியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியதாக நம்புகின்றனர்.

அந்த கடிதம் ஒரு குறிப்பை சொல்லுகிறது. அந்த குறிப்பானது, மேற்கில் ப்ரீமாண்டில் இருந்து, கிழக்கில் மெல்பார்ன் வரை தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு கப்பல் பயணத்தில் இருந்தவரின் குறிப்பைச் சொல்கிறது.ஜியோ இப்போது அந்த கடிதத்தை எழுதிய பால்கில்மோர் என்னும் 63 வயது பிரித்தானியரை பேஸ்புக் துணை கொண்டு தேடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல கடல்சார் ஆராய்ச்சியாளரான டேவிட் கிரிபின், ‘’தெற்கு கடற்கரையில் 50 ஆண்டுகளாக இந்த பாட்டில் மிதந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன் என்றால் கடல் எப்போதும் நிலையாக இருக்காது. அந்த வகையில் இந்த பாட்டில் கரை ஒதுங்கி இருக்கும். மண்ணில் புதைத்திருக்கும். தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட புயலால் கடலுக்குள் போயிருக்கும். கடலுக்குள் எந்த பொருளும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மிதக்காது.என தெரிவித்துள்ளார்.

1960ல் லட்சக்கணக்கான பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்த்தார்கள். அந்த பயணத்துக்கு ஆஸ்திரேலியா கட்டணச் சலுகை வழங்கியது. குழந்தைகளை இலவசமாக கூட்டிச் சென்றனர். ஆனால் வசந்தகாலம் வீசும் என எதிர்பார்த்துப் போன பிரித்தானியர்கள், ஆஸ்திரேலியா அப்படியானவ் வாய்ப்பை வழங்காததால் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பி போனார்கள். அப்படி போன சிறுவனின் கடிதமாகவும் அது இருக்கக்கூடும்!

Comments are closed.