ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன.? யாருக்கும் பயப்படாமல் நடந்த உண்மை சம்பவத்தை சொன்ன திருச்செல்வம்..!! நொறுங்கிப் போன ரசிகர்களின் இதயம்..

68,017

சூப்பர் ஹிட் சீரியலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். மேலும், இந்த சீரியல் டிஆர்பி அதிகரிப்பதற்கு ஒரே காரணமாக இருந்தவர் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் மறைந்த நடிகர் மாரிமுத்து தான் இவருடைய நடிப்பும் பேச்சு திறனின் மூலமாகவே

 

இந்த சீரியலை பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அவர் சொல்லும் எம்மா ஏய் என்ற வசனம் பலரையும் கவர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்கப்பட்டு ஓடி வந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் நேற்று திடீரென்று இவர் தன்னுடைய சூட்டிங்கை முடித்துவிட்டு செல்லும்பொழுது லேசாக நெஞ்சு வலி காரணமாக அவருடைய காரை தானாகவே ஓட்டி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுதுதான் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

இந்த தகவலை கேட்ட பலரும் இது வதந்தியான தகவல் என்று தான் முதலில் நினைத்தார்கள். அதன் பிறகு தான் இது உண்மையான நிகழ்வு என்று தெரிந்தவுடன்.. பல பிரபலங்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள். மேலும், இவருடைய மறைவிற்கு பல திரை பிரபலங்களும் சக கலைஞர்களும்

 

இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை அவருடைய சொந்த ஊரில் இவரை தகனம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் மறைந்த நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து இரங்கல் செய்தியும் தெரிவித்து

 

ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காலையில் சூட்டிங் ரெடி பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது டப்பி முடித்துவிட்டு ஷூட்டிங் வருவதாக கூறியிருந்தார். இவரின் இறப்பு பெரும் சோகத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இருந்தால் கூட ஏற்றுக்கொள்ள முடியும்.? ஆனால், நன்றாகவே தனது வேலையை முடித்துவிட்டு சென்று கொண்டிருக்கும் பொழுது இவர் உயிரிழந்த நிகழ்வு தான் பெரிய ஒரு அதிர்ச்சியை எங்களுக்கு கொடுத்துள்ளது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.