ரஜினி ரசித்து பார்த்த சீரியல் எது தெரியுமா.? அதுவும் இந்த சூப்பர் ஹிட் சன் சீரியலா.?

தற்பொழுது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை திருச் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த சீரியலை ரசித்து பார்ப்பதற்கு என்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று சொல்ல வேண்டும். இந்த சீரியல் வாரத்தில் ஏழு நாட்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து நடிகர் ரஜினியின் ஜெய்லர் படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அப்பொழுது படபிடிப்பின் பொழுது மாரிமுத்துவிடும் எதிர்நீச்சல் சீரியலை பற்றி ரஜினி பேசி உள்ளார். அது என்னவென்றால் எதிர்நீச்சல் சீரியலை தனது வீட்டில் தொடர்ந்து பார்த்து வருகின்றார்கள். நானும் நேரம் கிடைக்கும் பொழுது அதனை பார்ப்பேன் என்று ரஜினி கூறியதாக பேட்டியில் பிரபலம் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.