விஜய் குடும்பத்திற்கு சம்மந்தியாக போகும் முரளி குடும்பம் ஆதர்வால் தம்பி !! காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்!

42

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் முரளிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகனான அதர்வாவை சினிமாவில் அறிமுகப்படுத்தி தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதர்வாவின் தம்பியான் ஆகாஷ் சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்து வந்தார். படிப்பை முடிக்கும் முன் காதலில் விழுந்துள்ளார். சினேகா பிரிட்டோ என்ற பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் தங்கை மகள். நடிகர் விஜய்யின் அத்தை மகளை காதலித்து வந்தது இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. விஜய்யின் ஆரம்பகால படங்களை அவரது மாமா சேவியர் பிரிட்டோ தான் தயாரித்து வந்துள்ளார்.

இப்படி இருக்க தன் மகள் காதலித்து வந்ததை ஆரம்பத்தில் எ திர்ப்பு தெரிவித்துள்ளார் சேவியர் பிரிட்டோ. இரு வீட்டாரும் வேறு ம தத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மறுத்து வந்துள்ளனர். ஆனால் ஆகாஷும், சினேகாவும் காதலில் உறுதியாக இருந்ததால் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஆகாஷின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து வரும் டிசம்பர் 6ல் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். விஜய்64 படபிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய் கூடிய சீக்கிரம் குடும்ப விழாவிற்கு வருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Comments are closed.