கொரோனா பா தித்த தாயை பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற மகன் !! மனசாட்சி இல்லாத மகன் செய்த கொ டூர செயல் !!

26

நாடு முழுவதும் கொ ரோனா பாதி ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல மாநிலங்களில் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீ விரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் பெற்ற தாயை, கொ ரோ னா பா திப்பு காரணமாக பேருந்து நிலையத்திலேயே அவரது மகன் விட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் சென்று விசாரித்தபோது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் அப்போது கொ ரோனா பரிசோ தனை மேற்கொண்டதில் தொ ற்று உறுதியானது.

இதனை அடுத்து எனது மகன் இங்கு கொண்டு வந்து விட்டு சென்று விட்டான் என்று தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து அவரை கொரோனா நோ யாளிகளுக்கான மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments are closed.