தர்ஷன்- சனம் ஷெட்டி காதல் விவகார வ ழக்கு: நீதிமன்றம் அ தி ர டி உத்தரவு..!!

தர்ஷன் சனம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில், தர்ஷன் தற்போது தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார் என்று சனம் பொலிசில் புகார் அளித்திருந்தார்.தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், இவர்கள் இருவரும் காதலித்த விஷயத்தை கூட சனம் அப்போது சொல்லவில்லை.இப்படியொரு நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகை சனம் ஷெட்டி, தனக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறி அ தி ர் ச் சி கொடுத்தார்.மேலும், நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட சனம் ஷெட்டி, தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான்… ஆனால், அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும், காதலும் போய்விட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார்.

 

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த தர்ஷன் மீது நடிகையான சனம் ஷெட்டி பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரில், தன்னை காதலித்து தர்ஷன் ஏமாற்றி விட்டதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பல லட்ச ரூபாய் வரை மோ ச டி செய்ததாகவும் தெரிவித்தார்.இந்த வழக்கின் விவகாரம் சூடுபிடித்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு தர்ஷன் மனுத்தாக்கல் தொடுத்தார்.

அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் அளித்துள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் கா வ ல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.