வெளியான நடிகர் விஜய்யின் மகன் புகைப்படம்… தற்போது கனடாவில் எடுக்கப்பட்டதா…? தீயாய் பரப்பி வரும் ரசிகர்கள்…!

வெளியான நடிகர் விஜய்யின் மகன் புகைப்படம்… தற்போது கனடாவில் எடுக்கப்பட்டதா…? தீயாய் பரப்பி வரும் ரசிகர்கள்…! விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருக்கும் நிலையில், அவரது புகைப்படத்தினை அவ்வப்போது வெளியிட்டு தங்களது கவலைகளை, மகிழ்ச்சியாக்கிக்கொள்கின்றனர் ரசிகர்கள். ஆம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் வேலையில் பல நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களை பாதுகாத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது முறையாக ஊரடங்கினை நீட்டித்துள்ளது.

சமீபத்தில் கனடாவில் இருக்கும் விஜய் மகனை நினைத்து அவரது குடும்பம் கவலையில் காணப்படுவதாக வெளியான செய்திகள் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்தது.

பின்பு அவ்வாறு கவலை எதுவும் இல்லையென்றும் மகனிடம் தினமும் விஜய் போனில் பேசிவருவதாகவும், அங்கு சஞ்சய் நன்றாகவே இருக்கின்றார் என்று விஜய் தரப்பு தகவல் வெளியானது. தற்போது விஜய்யின் மகன் சஞ்சயின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இப்புகைப்படம் கனடாவில் தற்போது எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், அவரது ரசிகர்கள் இப்புகைப்படத்தினை தீயாய் பரப்பி வருவதுடன் அடுத்த இளையதளபதி என்றும் கூறிவருகின்றனர்.

Comments are closed.