கண்ணீருடன் துணைநடிகர் வெளியிட்ட வீடியோ…! நிதியுதவி அளித்த ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள் என்ன தெரியுமா..?

கண்ணீருடன் துணைநடிகர் வெளியிட்ட வீடியோ…! நிதியுதவி அளித்த ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள் என்ன தெரியுமா..? சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து பெருமளவில் தவிர்த்து வருகின்றனர. அவர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்கு இணங்க பல சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி கொடுத்து உதவினார். மேலும் தூய்மை பணியாளர்களுக்காக 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். அதனை தொடர்ந்து சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாயும் அளித்துள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது நடிகர் சங்கத்திற்கு 25 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஒருவர் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோவை குறிப்பிட்ட ராகவா லாரன்ஸ், இப்போதுதான் இந்த வீடியோவைப் பார்த்தேன். இதை எனக்கு அனுப்பிய நடிகர் உதயாவிற்கு நன்றி. நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். உதவி கேட்டு எனக்கு ஏராளமான வீடியோக்கள், போன் கால்கள் வருகின்றன. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். யாராவது உதவி செய்ய விரும்பினால் என்னோடு சேர்ந்து கொள்ளலாம். ஒரு ரூபாய் கூட உதவிகரமாக இருக்கும். சேவையே கடவுள் எனப் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.