அம்மாவும் இல்லை! அப்பாவும் இல்லை! ஆனால்..?? தங்கைகளுக்காக போராடும் 13 வயது சகோதரி..!! நெஞ்சை உருக்கும் சம்பவம்..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் ஊராட்சியில் வரும் கிராமம் கண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் 75 வயது முதியவர் சிவபுண்ணியம்… இவரின் இருமகன்கள் மற்றும் மருமகள்கள் உடல் நலக்குறைவு மற்றும் விபத்து காரணமாய் இ றந்துவிட்டார்கள், பேரன் ஒருவன் இருந்திருக்கிறார் அவர் கார் வி பத்தில் ஒரு காலை இழந்து எவ்வளவு மருத்துவம் பார்த்தும் பலனளிக்காமல் சில மாதங்களுக்கு முன் அவரும் இ றந்துவிட்டார்…

இப்போது அந்த முதியவர் தன் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் (பேத்திகள்) அனைவரும் ஒரு குடிசையில் வசித்து வருகிறார்கள், பெரியவர் சிவபுண்ணியமும் உடல் நலக்குறைவால் தற்போது பண்ணை வேலைகளுக்கும் செல்ல முடியாத சூழலில் நிர்கதியாய் அந்த பெண் குழந்தைகள்… இக்குடும்பம் குறித்து அவ்வூர் நண்பர் ஒருவர் நம்மிடம் கவலை தெரிவித்த உடன் அண்ணன் திரு.கார்த்திகேயன் அவர்களுடன் அக்குடும்பத்தினரை சந்திக்க கண்ணாரப்பேட்டை சென்றோம்… முறையே 13, 5, 3 வயது பெண்குழந்தைகள், சிறு குழந்தைகள் இருவரும் அவ்வயதுக்கே உரிய கவலையில்லா மன நிலையுடன் விளையாடி வந்தாலும், பெரியவள் தன் சித்தப்பா மகள்கள் ஆனாலும் பரிவுடன் இரண்டாம் தாயாய் அக்குழந்தைகளை கவனித்து கொள்கிறாள்…

பிள்ளைகளை விடுதியில் சேர்ப்பது குறித்து பேச்செடுக்கையில்.. “என்ன பாவம் பண்ணுச்சுங்களோ ஆயி அப்பன் இல்லாம வளருதுங்க, நாங்க கெழவங்கெழவி கெடக்குற வரைக்குமாவது இதுங்க கொஞ்சம் உறவோடு எங்க கூட கொடக்கட்டும், எங்க காலத்துக்கு பொறவு எங்கயாச்சும் பத்திரமாய் சேர்த்துவிட்டுடுங்கய்யா” என்று க ண்ணீரோடு

அவர்கள் முடிக்கையில் நாமும் கண்களை துடைக்க வேண்டிய சூழல் அங்கு… நேற்று அவர்களை சந்தித்த போது அரிசி மளிகை காய்கறி போன்ற பொருட்கள் கொடுத்து வந்தோம்… இப்பிள்ளைகளுக்கு எக்காலத்திலும் ஆதரவாய் இருப்போம், சத்தியப்பிரியா குடும்பத்திற்கு உதவும் எண்ணமும் வாய்ப்பும் இருப்பின், அழைக்க: 9003630101 உறவினர்

 

Comments are closed.