அரபு நாட்டில் மாஸ் காட்டி வரும் இந்திய இளைஞர் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பா அசந்து போய்ருவீங்க.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரர் அடல் சஜன். தற்போது ஐக்கிய அரபு எமீரகத்தில் வசித்து வரும் அடல் சஜன், டனுபே ஹோம் (Danube Home) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
இவருக்கு 30 வயது மட்டுமே ஆகிறது. மிக இளம் வயதிலேயே குடும்ப தொழில் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு விட்டது.தொழிலில் கொடி கட்டி பறப்பதால், ஆடம்பரமான வாழ்க்கையை அடல் சஜன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு கார்களை ஓட்டுவது என்றால், மிகவும் பிடிக்கும். அவரே அதை பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்.
அதுவும் அறிமுகம் இல்லாத இடங்களுக்கு செல்வது என்றால், அடல் சஜனுக்கு கொள்ளை பிரியம். அப்படி ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்றால், திரும்பி வர கூகுள் மேப்பைதான் அடல் சஜன் பயன்படுத்துவார்.

தொழிலதிபர்கள் என்றாலே மிக விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிப்பது வாடிக்கைதான். அதுவும் அடல் சஜன் போன்று கார் ஆர்வலர்களாக இருக்கும் தொழிலதிபர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

அவர்களது வீட்டில் மிகவும் விலை உயர்ந்த மற்றும் அரிய கார்கள் பல அணிவகுத்து நிற்கும். அப்படி அடல் சஜன் வைத்திருக்கும் கவர்ச்சிகரமான கார்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom)
பெரும் கோடீஸ்வரர்களின் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காராவது நிச்சயமாக இருக்கும். இதன்படி அடல் சஜனிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது.

நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை அடல் சஜன் வைத்துள்ளார். இந்த காரில் சொகுசு வசதிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை.லம்போர்கினி கல்லார்டோ (Lamborghini Gallardo)லம்போர்கினி நிறுவனத்தில் இருந்து வெளிவந்த மிக பிரபலமான கார்களில் ஒன்று கல்லார்டோ. உலகின் அனைத்து மூலைகளிலும் இந்த கார் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது.

இதில், அடல் சஜனும் ஒருவர். முதலில் இந்த காரைதான் அடல் சஜன் தனது தினசரி பயன்பாட்டிற்கு மிக நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தார்.ஆனால் புதிய கார்கள் வர வர லம்போர்கினி கல்லார்டோ காரை பயன்படுத்துவதை அடல் சஜன் குறைத்து கொண்டார். எனவே தற்போது பெரும்பாலான நேரம் லம்போர்கினி கல்லார்டோ கார் கராஜில்தான் நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் பிரபல மனிதர்கள் ஒரு சிலரிடம் லம்போர்கினி கல்லார்டோ கார் இருக்கிறது.

ஃபெராரி கலிபோர்னியா டி (Ferrari California T)ஃபெராரி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் அழகான கார்களில் கலிபோர்னியா டி மாடலும் ஒன்று. கடந்த 2014ம் ஆண்டு ஃபெராரி நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்தது. ஆனால் தற்போது இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. ஃபெராரி கலிபோர்னியா டி காரின் தோற்றம் நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

அடல் சஜனின் பெற்றோர், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு ஃபெராரி கலிபோர்னியா டி காரை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. அடல் சஜனிடம் இருக்கும் ஃபெராரி கலிபோர்னியா டி சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
அடல் சஜனின் ஃபேவரைட் கார் இதுதான். மற்ற கார்களை காட்டிலும், இந்த காரில் பயணிப்பதைதான் அடல் சஜன் அதிகம் விரும்புவார்.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு கன்வெர்டபிள் (Bentley Continental GT Speed Convertible)
மிக இளம் வயதில் இருந்தே கன்வெர்டபிள் கார்கள் மீது அடல் சஜன் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். அடல் சஜனின் பெற்றோர், அவரது திருமண நாளை முன்னிட்டு, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு கன்வெர்டபிள் காரை அவருக்கு பரிசளித்துள்ளனர். இது கஸ்டமைஸ் செய்யப்பட்ட காராகும். அடல் சஜனிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று.

பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga)
அடல் சஜன் பென்ட்லீ பென்டைகா காரையும் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இந்த காருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.எனினும் கல்ப் நியூசுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், வார நாட்களில் பென்ட்லீ பென்டைகா காரை எடுத்து கொண்டு, அலுவலகம், கூட்டங்களுக்கு செல்வதை தான் விரும்புவதாக அடல் சஜன் கூறியுள்ளார்.

Comments are closed.