ப-சியுடன் வந்த க-ர்ப்பிணி யானை: அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து கொ-ன்-ற மூர்க்கர்கள்!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதியில் கருவுற்ற யானை ஒன்று பசியுடன் சுற்றி திரிந்துள்ளது. இதனால் அந்த யானை பசி தாளாமல் ஊருக்குள் வந்துள்ளது. அங்கு மனிதர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டுள்ளது. அப்போது சிலர் அன்னாசி பழத்தில் வெ-டிமருந்து வைத்து யானைக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். யானை அதை சாப்பிட முயன்ற போது அந்த வெ-டிமருந்து வாயிலேயே வெ-டித்துள்ளது.

இதனால் பலத்த கா-ய-மடைந்த யானை வ-லி தா-ங்க முடியாமல் அங்கிருந்து மீண்டும் காட்டுக்குள் ஓடியுள்ளது. இருப்பினும் வ-லி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் யானை ப-ரி-தாபமாக ப-லி-யானது.

இந்த தகவல் இணையத்தில் கேரள வனத்துறை அதிகாரி ஒருவரால் பதியப்பட்ட நிலையில் பலரும் யானையை கொ-ன்-றவர்களுக்கு உரிய த-ண்டனை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மனிதர்கள் ரூபத்தில் வாழும் இதுபோன்ற மிருகங்கள் தான் உண்மையில் காட்டில் இருக்க வேண்டியவர்கள் என்று பலரும் ஆதங்கத்துடன் கூறி வருகிறார்கள்.

 

Comments are closed.