எல்லையில் அரங்கேறிய திருமணம்… ஏ க் கத்துடன் பிரிந்து சென்ற மணமக்கள்! நடந்தது என்ன?

மணமகனுக்கு கேரளா செல்ல அனுமதி கிடைக்காததால், தமிழக-கேரள எல்லை குமுளியில் எ ளி மை யா க திருமணம் நடைபெற்றுள்ளது.தேனி மாவட்டம், க. புதுப்பட்டி சுப்ரமணியன்கோயில் தெருவை சேர்ந்த ரத்தினம் மகன் பிரசாந்த்(25). இவருக்கும், கோட்டயம் கணேசனின் மகள் காயத்திரி(19) என்பவருக்கும், நேற்று கேரள மாநிலம் வாலாடியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

மணமகனுக்கு கேரளா செல்ல ‘இ பாஸ்’ கிடைக்காததால், இரு மாநில எல்லையான குமுளிசோதனைச் சாவடி அருகே கடைவீதியில் இருவரது உறவினர்கள் முன்னிலையில் எ ளி மை யாக நேற்று பகல் 12:40 மணிக்குதிருமணம் நடைபெற்றுள்ளது.

கேரளா செல்ல மணமகனுக்கும், தமிழகம் வர மணப்பெண்ணுக்கும் அனுமதி கிடைக்காததால் திருமணம் முடிந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.மணமகளுக்கு முறையான அனுமதி கிடைத்தவுடன் தமிழகப்பகுதியில் உள்ள மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கேரள பொ லி சா ர் தெரிவித்துள்ளனர்.

 

Comments are closed.