ஏற்கனவே திருமணம் ஆன காமெடி நடிகை ஆர்த்தியின் புதிய காதலர் இவர் தான்! திருமணம் செய்ய போகிறாராம் அவரே வெளியிட்ட பதிவு

69

தமிழ் நடிகை ஆர்த்தி ஒரு ஆணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அ திர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஆர்த்தி ஏற்கனவே தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகரான கணேஷ் என்பவரை காதலித்து வந்தார். பின் ஆர்த்தி, கணேஷ்ஷை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது.

இருந்தும் தற்போது வரை இவர்கள் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆர்த்தி கலந்து கொண்டார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இவர் தனக்கு பிடித்த புகைப்படம் மற்றும் மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் இவர் ஒரு ஆணின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பதிவிட்டு அதில் அவர் கூறியிருப்பது, இவர் தான் என் புது காதலர். இவரை தான் என் திருமணம் செய்து கொள்ள போகிறேன்.இதை ஆர்த்தி அவருடைய கணவருக்கு டேக் செய்துள்ளார். ஆனால், உண்மையில் இது ஒரு ஆணின் புகைப்படமே இல்லை.

ஆர்த்தி தன்னுடைய முகத்தை ஃபேஸ் ஆப் மூலம் மாற்றி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ஒரு நிமிடம் ரசிகர்கள் அ திர்ச்சி விட்டார்கள். சமீபத்தில் ஃபேஸ் அப் செயலி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஆண்கள் தங்களை பெண் போலவும், பெண்கள் தங்களை ஆண்கள் போலவும் சித்தரித்து போட்டோவை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Comments are closed.