இந்த அழகான குண்டு பையன் இப்போ எப்படியிருக்கான் தெரியுமா? புகைப்படம் உள்ளே..!!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகை, நடிகர்களாக ஜொலித்தவர்கள் ஏராளம்.  அந்த வகையில் பள்ளியில் படிக்கும் போதே கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்திய பரத் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர்.  இவரது நிகழ்ச்சிகளை பார்த்த எ.வி.எம் குரூப் தான் நைனா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் படத்தில் இவரை அறிமுகபடுத்தினர். தொடர்ந்து பஞ்சதந்திரம், போக்கிரி, வின்னர், உத்தம் புத்திரன் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்க்கும் குழந்தை நட்சத்திரமானார். இதுவரையிலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தெலுங்கில் வெளிவந்த ரெட்டி பட வெற்றிக்கு பின்னர் இவரை பாடசாலையில் அனைவரும் சிட்டிநாயுடு என்றுதான் அழைப்பார்களாம்.

அத்துடன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார், இறுதியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்காவிற்கு தம்பியாக நடித்தார். தற்போது படிப்பில் கவனம் செலுத்திவரும் பரத், பெரியவராக வளர்ந்ததோடு ஸ்லிம்மாகவும் மாறிவிட்டார்.

விரைவில் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.


Comments are closed.