விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு நயன்தாரா செய்த செலவு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு செலவா தெரிஞ்சால் ஷாக் ஆகிடுவீங்க!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது, நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் குடும்பத்துடன் கோவா சென்று, தனது தாயின் பிறந்தநாளையும், அதனைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி விக்னேஷ் சிவன் பிறந்தநாளும் செம விமரிசையாக நயன்தாராவால் அட்டகாசமான பார்ட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் அனைத்து கொண்டாட்டங்களும் முடிவடைந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானம் மூலம் சென்னை வந்து ஸ்டைலாக இறங்கினார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நயன்தாரா எவ்வளவு செலவு செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் பிறந்த நாளன்று ஒரு நாளைக்கு மட்டும் கோவா நட்சத்திர ஹோட்டலில் 25 லட்சம் செலவு செய்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.