நடிப்பை விட்டுவிட்டு மருத்துவர் வேலைக்கு சேர்ந்த நடிகை..!! வாய்ப்பு கிடைக்கவில்லையா.? அல்லது பெற்றோரின் வற்புறுத்தலா.?

இந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் இயக்கம் திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ஒரு படமாகும். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் இரண்டாம் பாகம்.

 

இந்த படத்திற்காக தற்போது பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்து வருகின்றார்கள். மேலும், இவருடைய மகள் தற்பொழுது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர்தான் நடிகை அதிதி சங்கர் என்பவர்.

 

இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தின் நடித்துள்ளார்.

 

 

அடுத்தபடியாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவுப்பும் இதுவரை வெளியாகவில்லை..

 

இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக சென்னையில் ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை இரண்டு வருடத்திற்கு முன் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் டாக்டர் வேலையை செய்ய தொடங்கி இருக்கின்றார்.

 

மேலும், டாக்டர் உடையில் இருக்கும் படியான சில புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவுடன் பல ரசிகர்கள் சினிமாவை விட்டு விலகி மருத்துவர் துறைக்கு சென்று விட்டீர்களா என்று கூறி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

 

 

 

 

Comments are closed.