இந்திய சினிமாவில் இப்படி ஒரு பிரம்மாடத்தில் படம் வெளிவந்தது கிடையாது.? வித்தியாசமான கதையில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்..!!

ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஜிவி பிரகாஷ். அதன் பிறகு நடிகராக தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் பல நடிகர்களுக்கு பலப்படத்தில் சூப்பர் ஹிட் பாடலை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அடியே. இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதற்கு முன்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் நடிகை திவ்யா பாரதி நடிப்பில் உருவான திரைப்படம் தான் பேச்சுலர். இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைய இருக்கின்றது. அந்த வகையில் ஜிவி பிரகாஷின் 25 ஆவது திரைப்படத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும் இந்த படத்தின் டைட்டிலை நேற்று மாலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த படத்தின் டைட்டில் கிங்ஸ்டன். ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் கடலில் செல்லும் கப்பலில் நடக்கும் ஒரு ஆக்சன் காட்சிகளை மையமாக வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

இதற்காக மிகவும் பிரம்மாண்டமாக செட்டை அமைத்து படத்தை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். இதுவரை இந்திய சினிமாவில் இப்படி ஒரு கதை அம்சத்தில் பிரம்மாண்டத்தில் எந்த ஒரு திரைப்படம் உருவாகியது கிடையாது என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

Comments are closed.