என் அம்மா என் தந்தைக்கு இரண்டாம் தாரம்…பள்ளி குழந்தைகளிடம் மனமுருகி பேசிய எஸ்பிபியின் வீடியோ.!

40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று ம ர ண ம டைந்தார். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

 

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இந்திய திரை இசையின் முக்கிய அடையாளமாக இருந்த பாடகர் எஸ்.பி.பி. மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் மரணம் குறித்தான தகவல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, மறுநாள் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது வரை அவரது இசை ஊடகங்கள் மற்றும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருந்ததுஎஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் பிரபல ரிவி ட்விட்டர் பக்கத்தில் அவர் பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அவர் அந்த வீடியோவில் தனது குடும்பம், பள்ளி மற்றும் கல்லூரி வாழ்கை என பலவற்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Comments are closed.