கஷ்டத்திற்காக கவர்ச்சியில் ஆட்டம்போட்ட டிஸ்கோ சாந்தியின் தற்போதைய நிலை…இந்த நடிகர்தான் அவரது கணவரா…?

கஷ்டத்திற்காக கவர்ச்சியில் ஆட்டம்போட்ட டிஸ்கோ சாந்தியின் தற்போதைய நிலை…இந்த நடிகர்தான் அவரது கணவரா…? இந்திய திரையுலகில் ஐட்டம் பாடல்களால் ரசிகர்களை கவரும் நடிகைகள் அதிகம் இருப்பார்கள். அந்தவகையில் இந்திய சினிமாவில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. டிஸ்கோ சாந்தி என்று அறியப்படும் சாந்தக் குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், ஒரு பாடலுக்கு ஆடுகின்ற நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை லலிதா குமாரியின் சகோதரியும் ஆவார். மலையாள திரைப்பட நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்த படம் பாதியில் நின்றதால், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வந்தாக தெரிவித்துள்ளார். இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார் முதலில் பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சியால் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர்.
பணக்கஷ்டத்தால் பிழைக்க வழியில்லாமல் திரைத்துறைக்கு டான்சராக அறிமுகமாகி குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

தெலுங்கு நடிகரும் நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நேர்மை தவறாத போலிஸாக நடித்த நடிகர் ஸ்ரீ ஹரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2013ல் அவரது கணவர் மாரடைப்பால் இறந்ததால் தன் இரு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். கணவர் இறந்து சில மாதங்களிலே கல்லீரல் பாதிப்பால் அவதியுற்று வந்தார். இதற்காக அவரது மகன்கள் சிங்கபூருக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக கூட்டிச்சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது படமும் இல்லாமல் வருமானம் ஏதும் இல்லாமல் கஷ்டத்தில் இருந்து வருகிறார். நல்ல கதைக்காக காத்திருந்து வருகிறார் டிஸ்கோ சாந்தி.

Comments are closed.