அரைஞாண் கயிறு | நம் முன்னோர்களின் மருத்துவம் | அரைஞாண் கயிறு காட்டுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
பெண்களை பொறுத்த வரையில் சிறுவயதில் இருந்து காலில் கொலுசும்., காதில் காதணியும்., திருமணம் முடிந்த பின்னர் கால் விரலில் மெட்டியும் அணிவார்கள். அந்த வகையில் கொலுசு அணிவதற்கும்., மெட்டி அணிவதற்கும் அறிவியல் காரணங்கள் இருக்கிறது.அதனைப்போன்று ஆண்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு என்கிற அறுணா கயிறை (பேச்சு வழக்கில்) அணிவது வழக்கம். இந்த விசயத்திற்கு பின்புலமாகவும் அறிவியல் சார்ந்த காரணங்கள் உள்ளது.பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குடல் இறக்க நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது., இந்த பிரச்சனையை ஆங்கிலத்தில் “ஹெரணியா” என்று கூறுவது உண்டு. இந்த அரைஞாண் கயிறை கட்டுவதன் மூலமாக குடல் இறக்க நோய்யானது வராமல் பாதுகாக்கப்படுகிறது.
உடல் எடை அதிகமாக கொண்ட ஆண்களுக்கு குடல் இறக்க நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால்., நமது முன்னோர்கள் இருந்த காலத்தில் இருந்து இந்த நோய்யானது இருந்திருக்கும் பட்சத்தில்., அவர்களின் ஆராய்ச்சி மற்றும் கூற்றுப்படி அரைஞாண் கயிறானது கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
துவக்க காலத்தில் கட்டப்பட்ட கயிறானது கருப்பு நிறத்திலும்., காலத்தின் மாறுதலுக்கேற்ப மற்றும் வசதிக்கேற்ப சிவப்பு நிற கயிறுகள்., வெள்ளி மற்றும் தங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அரைஞாண் கயிறுகள் கட்டப்படுகிறது.
ஞாண் என்ற சொல்லுக்கு கயிறு என்பது பொருள்., உடலின் சரிபாதியை அரை என்று குறிப்பிடுகிறோம்., இதனாலேயே இந்த அரைஞாண் கயிறை இடுப்பு பகுதியில் கட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலமாக குடல் இறக்க நோய்யானது கட்டுப்படுத்தப்படுகிறது என்பது அன்றைய காலகட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் அறியாத சில ரகசியங்கள் இந்த விஷயத்தில் இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும்
Comments are closed.