தனது குடும்ப புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய நகுல் – நடிகர் நகுலுக்கு இவ்வளவு அழகான மனைவியா ? வைரலாகும் புகைப்படங்கள் !

முதல் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய நகுல் – நடிகர் நகுலுக்கு இவ்வளவு அழகான மனைவியா ? வைரலாகும் புகைப்படங்கள் ! பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனாலும் ‘அட்ரா ரா நாக்க முக்கா ‘ பாடலின் மூலம் ABC என 3 சென்டர்களில் அடித்து நொறுக்கினார் நகுல், படமும் இந்த ஒரு பாடலினால் வெற்றியும் பெற்றது. தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் நடிப்பைத் தொடர்ந்து பாடும் திறமையை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பாய்ஸ் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல்.

இப்படத்தைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து, மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா டாட் காம், செய், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகரைத் தொடர்ந்து பல படங்களுக்கு பின்னணிப் பாடல்களும் பாடியுள்ளார். குறிப்பாக விக்ரம் நடிப்பில் வந்த அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை பாடியுள்ளார். தொடர்ந்து, கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நகுல் மனைவியுடன் இணைந்து பாடல் பாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இருவருக்கும் பிடித்த பாடலை பாடியதோடு, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.