ஆ த்தா..! நாக்கை அ றுத்து சாமிக்கு படைத்த இளைஞர்..! அ திர்ந்துப்போன கோயில் அர்ச்சகர்..! என்ன நடந்தது தெரியுமா..?

ஆ த்தா..! நாக்கை அ றுத்து சாமிக்கு படைத்த இளைஞர்..! அ திர்ந்துப்போன கோயில் அர்ச்சகர்..! என்ன நடந்தது தெரியுமா..? கடவுளே இனி கொரோனா யாருக்கும் பரவ கூடாது. நாட்டில் கொரோனா பரவல் குறைய வேண்டும் என வேண்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதான விவேக் சர்மா. அம்மன் மீது தீவிர பக்தி கொண்ட இவர், தனது தம்பி ஷிவம் உள்பட 8 பேருடன் குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பவானி மாதா கோயிலை புதுப்பிக்கும் பணியில்கடந்த 2 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் கடைக்கு சென்றுவிடுவருவதாக தனது தம்பியிடம் கூறிவிட்டு விவேக் சர்மா அருகில் இருக்கும் நாதேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு தனது நாக்கை அறுத்துக்கொண்டு கையில் நாக்குடன் விவேக் சர்மா மயங்கி கிடந்துள்ளார். வெளியே சென்ற கோயில் அர்ச்சகர் மீண்டும் கேவிலுக்கு வந்தபோது விவேக் ஷர்மா கையில் நாக்குடன் மயக்கம் போட்டு கிடப்பதை பார்த்த அவர் பயந்துபோய் போலீசாருக்கு தகவல் கொட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விவேக் ஷர்மாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்..

இதனிடையே, கடைக்கு சென்றுவருவதாக கூறிய அண்ணனை காணவில்லையே என அவரது தம்பி விவேக் ஷர்மாவின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டுள்ளார். போனை எடுத்த போலீசார் நடந்ததை கூற விவேக் ஷர்மாவின் தம்பி கதறி துடித்துள்ளார். இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில், விவேக் ஷர்மா கடந்த 5 நாட்களாக சொந்த ஊருக்கு செல்ல முற்பட்டதாகவும், ஆனால் ஊரடங்கு காரணமாக வெளியே போக முடியாததால் ஊரடங்கு நீங்கி மக்கள் நலமுடன் வாழவேண்டும் என வேண்டிக்கொண்டு நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

தற்போது அறுபட்ட நாக்கை மீண்டும் ஒட்டவைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.