பாலுக்காக அ ழு த குழந்தை !! பால் வாங்க மின்னல் வேகத்தில் ஓடிய போ லீ சாருக்கு அ டி த் த அதிர்ஷ்டம் !! வைரலாகும் CCTV காட்சி உள்ளே !!

ரயில் பயணங்களில் ரயிலுக்குள்ளேயே டீ, காபி, பால், வடைவகைகள் எல்லாம் கொண்டுவருவார்கள். ஆனால் கரோனா தொற்றுப் பரவலுக்கு பின்பு ஓடத் தொடங்கியிருக்கும் ரயில்களில் அப்படியான சூழல் இல்லை. இப்போதெல்லாம் ரயிலுக்குள்ளும் எதுவும் கொண்டுவர மாட்டார்கள். இந்த சூழலில்தான் ஓடும் ரயிலில் பால் கேட்டு ஒரு குழந்தை அழுதது…அதன்பின்னர் நடந்தவை தரமான சம்பவம்!
கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து,உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சிறப்புரயிலில் நான்கு மாதங்களே ஆன குழந்தையுடன் ஹரீப் ஹாஸ்மி என்ற பெண், அவரது கணவரோடு சென்றுகொண்டு இருந்தார். ஹரீப் ரயிலில் பயணத்தைத் தொடங்கியது முதலே தன் நான்குமாத குழந்தைக்கு பால்வாங்க முயற்சித்து இருக்கிறார். வழிநெடுகிலும் பால் வாங்க முயற்சித்தும் அந்த தாயின் எண்ணம் நிறைவேறவில்லை.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி அந்த ரயில் போபால் ரயில் நிலையம் வந்த போது, சி.ஆர்.பி.எப் போலீஸ்காரர் இந்தர்சிங் யாதவ் என்பவரிடம் தன் நிலையை விளக்கிச் சொல்லியிருக்கிறார். உடனே இந்தர்சிங் இந்த ஸ்டேசனிலும் இப்போது பால் இல்லை.

ஆனால் இங்கு ரயில் பத்துநிமிடங்கள் நிற்கும். அதற்குல் வெளியேபோய் வாங்கிவருகிறேன் எனச்சொல்லி ஸ்டேசனை விட்டு வெளியே போய் அந்த குறுகிய நேரத்தில் பால்வாங்கித் திரும்பியிருக்கிறார். ஆனால் அதற்குள் ரயில் ஸ்டேசனை விட்டு மூவாகவே ரயிலின் பின்னாலேயே ஓடிப்போய் அந்த பாலை குழந்தையின் பெற்றோரிடம் சேர்த்து இருக்கிறார்.

தன்னலம் கருதாமல் மின்னல்வேகத்தில் இதைச் செய்திருக்கிறார் இந்தர்சிங் யாதவ். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இந்தக்காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதுகுறித்து கேள்விப்பட்ட ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இந்த வீடியோவை ட்விட் செய்து ரயில்வே போலீஸை வாழ்த்தியதோடு, அவருக்கு தகுந்த சன்மானமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Comments are closed.