நித்தியானந்தாவின் கைலாசா எப்படியிருக்கின்றது தெரியுமா?… ஆடல், பாடல் என கலக்கும் சிஷ்யைகள்

பல ச ர் ச்சைகளில் சிக்கி வரும் நித்தியானந்தாவின் கைலாசா எவ்வாறு இருக்கின்றது என்பதை அவர்களது சிஷ்யைகள் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள காட்சி தீயாய் பரவி வருகின்றது. காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் பிரபல சாமியார் நித்யானந்தா கைலாசத்திற்காக புதிய பணத்தை அறிமுகப்படுத்த போவதாக சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் அறிவித்துள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, நித்தியானந்தா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவை வாங்கிவிட்டதாக அறிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் அந்த தீவிற்கு ‘கைலாசா’ என்று பெயரிட்டு அதன் பிரதமராகப் பிரகடனப்படுத்திக் கொண்டதுடன், தன்னுடைய பக்தர்கள் கைலாசாவிற்கு வந்து செல்வதற்கு தனி பாஸ்போர்ட்டையும் வெளியிட்டதோடு, கைலாசாவிற்கு செல்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தார்.

தற்போது தனி கரன்சியை வெளியிடப்போவதாக கூறியுள்ளார் நித்தியானந்தா. இந்நிலையில் நித்தியின் கைலாசா எவ்வாறு இருக்கின்றது என்பதை சிஷ்யைகள் காணொளியினை வெளியிட்டுள்ளனர்.

Comments are closed.