கொ ரோ னாவிலிருந்து மீண்டு வந்த மகளுடன் அர்ஜுனின் கொண்டாட்டம்…. வெளியான புகைப்படம்!

நடிகர் அர்ஜுன் தனது பிறந்தநாளைக் இன்று கொண்டாடியுள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டு காலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னணிக் கதாநாயகனாகவும் கடந்த பத்தாண்டுகளில் குணச்சித்திர, வில்லன் நடிகராகவும் வெற்றிகரமாக கலக்கி வருகின்றார்.
மேலும் நடிகர் என்பதையும் தாண்டி இயக்குநர். கதை-திரைக்கதை ஆசிரியராகவும் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

சமீபத்தில் இவரது மகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அர்ஜுன் தனது குடும்பத்துடன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதில் அவரது மகள் மற்றும் மனைவி காணப்படுகின்றனர். கொரோனாவில் மீண்டு வந்துவிட்டாரா அல்லது இது பழைய புகைப்படமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

Comments are closed.