கொரோனா வைரஸ் எங்களை தாக்காது.. கைலாசாவை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நித்தியானந்தா!

உலகம் முழுவதும் கொ ரோனா வைரஸ் ஆனது பரவி பெரும் உ யிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களும் எப்பொழுதும் தான் இயல்பு வாழ்க்கை திரும்புவோம் என வேதனையுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா கொ ரோ னா வைரஸ் குறித்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமாக கருதப்படும் பிஎம்ஓ கைலாஸ் அக்கவுண்டில் ஒரு டிவிட் போட்டுள்ளார்.

அதில், கொ ரோனா வைரஸால் கைலாசா பாதிக்கப்படவில்லை. கொ ரோனா வைரஸ் எங்களைத் தாக்காது. எதிர்காலத்திலும் எங்களைத் தாக்காது. ஏனெனில் பரமசிவன் எங்களைப் பாதுகாத்து வருகிறார்.
காலபைரவரும் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாவலாக இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரும் விநாயகர் சதுர்த்தியில் கைலாசா தீவு குறித்த முக்கிய தகவல்களை அவர் வெளியிடவுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.