மணமேடையில் மாப்பிள்ளைக்கு வந்த கிப்ட்…பிரிந்ததும் அதிர்ந்த உறவினர்கள்.. இப்படியெல்லாம் கூடவா நண்பர்கள் செய்வார்கள்?

திருமணம் வாழ்வில் நடக்கும் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று. வாழ்வில் ஊர் கூடி, சொந்த,பந்தங்கள் திரண்டு நடக்கும் திருமணங்கள் வாழ்வில் ஒருமுறைதான் நடக்கும். அப்படிப்பட்ட திருமண நிகழ்வில் அதுவும் மேடையில் இருந்தவாறு நண்பர்கள் கொடுத்த கிப்டை மணமகன் பிரிக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது.இப்போது கரோனாவினால் பெரும்பாலான சாப்ட்வேர் கம்பெனிகள் வீட்டில் இருந்தே பணிசெய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இந்த கரோனா காலத்தில் திருமணங்களையும் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து, 50 பேருக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் அதையெல்லாம் தாண்டி ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் மிகமுக்கிய தருணங்களில் ஒன்று,

வசீகரா திரைப்படத்தில் இடம்பெற்ற மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல..மீனாட்சி சுந்தரேசா பாடல் திருமணத்தின் மேன்மையைப் பேசும். அப்படி உறவுகள் சூழ கொண்டாட்டமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது ஒரு திருமணம். அப்போது மாப்பிள்ளைக்கு அவரது நண்பர்கள் ஒரு கிப்ட் கொடுத்தனர். கூடவே அதை மேடையிலேயே பிரிக்க வேண்டும் எனவும் உத்தரவு போட்டனர். அப்படி மாப்பிள்ளை பிரித்தபோது உள்ளே சிலேட்டில் கேம் ஓவர் என எழுதப்பட்டு இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.