பெரிய நடிகர்களுக்கு கூட வராத மனசு.? சொன்னதை செய்து காட்டிய விஜய் டிவி பாலா.. பாராட்டும் சக கலைஞர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் பாலா என்பவர். இவரை பலரும் வெட்டுக்கிளி பாலா என்று கூட கலாய்த்து வருகிறார்கள். மேலும், இவர் கொக்கி கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பிரபலமான.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் தான் பாலா ஆதரவற்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்குச் செய்யும் உதவிகள் பற்றி பல தகவல்கள் வெளிவந்தது மிகப்பெரிய நட்சத்திரமாக இல்லாத பொழுது கூட கோடிகளில் சம்பளம் வாங்காத பொழுது கூட பாலா

 

இப்படி தனது கிடைக்கும் சின்ன தொகையை கூட சேமித்து வைத்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இவர் சில மாதங்களுக்கு முன்பாக அறந்தாங்கி பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும், பின்னர் 20 நாட்களுக்கு முன்

 

ஈரோடு சத்தியமங்கலம் மலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும் பொழுது பாலா இதே போன்ற மலை கிராம மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள

 

சோழகனை கிராமத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து இந்த ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆம்புலன்ஸ் மட்டும் இல்லாமல் 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி மற்றும் கடப்பாரை போன்ற வேளாண் உபகரணங்களையும்

 

தன் சொந்த செலவில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கி கொடுத்துள்ளார். இவர் இதுபோன்று தொடர்ந்து உதவிகளை செய்து வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. மேலும், இந்த வருடத்திற்குள் நான் 10 இலவச ஆம்புலன்ஸ் கொடுத்து தான் என்னுடைய குறிக்கோள் என்று அவர் சொல்லியுள்ளார்.

 

மேலும், இந்த ஆம்புலன்ஸ் முக்கிய மருத்துவ வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு அவர் செய்து வருகிறார். மேலும், பிரபல நடிகர்களாக இருந்து வருபவர்களே இது போன்ற செயல்களை செய்வதற்கு தயங்கி வரும் நிலையில் தனக்கு வரும் சிறிய தொகையை வைத்துக்கொண்டு இப்படி ஒரு சேவையை செய்து வருகிறார் என்று சக கலைஞர் இவரை பாராட்டி வருகிறார்கள்…

 

Comments are closed.