பழம்பெறும் மூத்த நடிகர் மரணம்.? அதிர்ச்சியில் திரையுலகினர்.. கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்..!!

மலையாளத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த விடருன்னா மோட்டுகள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் கைலாஷ் நாத் என்பவர். இவருக்கு தற்பொழுது 65 வயது ஆகின்றது. இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்திலும் வில்லன் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு ஒரு சில தமிழ் திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கிட்டத்தட்ட தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் திடீரென்று கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மருத்துவர்கள் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இவர் சற்று முன் உயிரிழந்துள்ளார். மேலும், அவருடைய மறைவிற்கு பலரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.