கமல் ரகுவரன் கடைசி வரை சேராமல் போக என்ன காரணம்.? ரகுவரன் மனைவி ரோகினி வெளியிட்ட உண்மை தகவல் உள்ளே..!!
தமிழ் சினிமா உலகில் ஏராளமான வில்லன்கள் தனக்கென்று அடையாளத்துடன் இருந்து வந்துள்ளார்கள். அந்த வகையில் இளம் வயதிலேயே மிகப்பெரிய அளவில் பிரபல வில்லனாக பலரின் கவர்ந்தவர் தான் நடிகர் ரகுவரன் என்பவர். இவர் 1982 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளிவந்த அக்கா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான. தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாக மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு வில்லனாக இவர் அவதாரம் எடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இவரை ஹீரோவாக பார்த்ததைவிட வில்லனாகத்தான் பலரும் ரசித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் 90களில் பலருக்கும் பிடித்த ஒரு வில்லன்களில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி போன்ற நடிகர்களின் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஆறு வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு ரகுவரன் 2008 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக உயிர்ழந்தார். இந்த நிகழ்வு தமிழ் சினிமாவில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற முன்னணி நடிகருக்கு வில்லனாக நடித்திருந்த இவர் ஏன் கமலுடன் மட்டும் நடிக்கவில்லை என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.
அதற்கு அவரது மனைவி ரோகினி நாயகன் திரைப்படத்தில் நடிகர் நாசர் நடித்திருந்த கதாபாத்திரம் முதலில் இவர் தான் நடக்க இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் அவர் வேறு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர் நீளமான முடி வைத்து இருந்ததால்
அந்த வாய்ப்பு இவருக்கு வராமல் போய்விட்டதாக அவரது மனைவி சமீபத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கமலுடன் திரைப்படத்தில் நடித்திருந்தால் கமலின் நடிப்பிற்கு மதிப்பு குறைந்து விடும் என்ற காரணத்திற்காகவும் கமல் நடிப்பதற்கு அவரை சம்மதிக்கவில்லை என்று பல ஊடகத்தில் கூறப்படுகின்றது…
Comments are closed.