வாய்ப்பை தவறவிட்ட மீனா.? சரியாக வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிம்ரன்..!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன். நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கேப்டன். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்தபடியாக துருவம் நட்சத்திரம், அந்தகன், வணங்காமுடி போன்ற அடுத்தடுத்து திரைப்படம் நடிக்க இருக்கின்றார்.

 

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் நட்புக்காக. இந்த திரைப்படம் 1998 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் விஜயகுமார் இணைந்து நடித்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் தந்தை மற்றும் மகன் இரண்டு கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருப்பார்.

 

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருப்பார். ஆனால், இதற்கு முன்பாக இந்த வாய்ப்பு நடிகை மீனாவுக்கு தான் சென்றது முதலில் கே எஸ் ரவிக்குமார் மீனாவிடம் தான் கூறியுள்ளார். ஆனால், கால் சீட்டு இல்லாத காரணத்தினால். இந்த வாய்ப்பு அவருக்கு போகாமல் தவற விட்டு அதன் பிறகு நடிகை சிம்ரன் நடித்த சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார்கள்…

 

Comments are closed.