திருமணத்திற்கு பிறகு ஒரே படம்தான்.? சினிமாவில் இருந்து விலகிய பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் இருந்து வருகின்றார்கள். இன்று அவர்கள் பிரபல நடிகையாக கூட ஒரு சிலர் திகழ்ந்து இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிறைய தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஷாலினி என்பவர்.

 

நடிகர் விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், மாதவன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை ஷாலினி 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜித்துடன் இணைந்து அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.

 

அந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அதன் பிறகு இவர்கள் இருவரும் அவர்களது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு ஒரு மகள் மற்றும்

 

ஒரு மகன் இருக்கின்றார்கள். மேலும், நடிகை ஷாலினி தனது திருமணத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அஜித்துடன் பிரியாத வரம் வேண்டும் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.

 

அதன் பிறகு தனது குடும்பம் தான் முக்கியம் என்று முடிவெடுத்து சினிமாவில் இருந்து நடிகை ஷாலினி விலகிவிட்டார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்கள் வந்து அதனை மறுத்து குடும்பத்துடன் தற்போது நேரத்தை செலவிட்டு வருகிறார்…

 

Comments are closed.