13 ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் இணையும் சூப்பர் ஸ்டார்.. படத்தின் தகவல் வெளியானது.? கொண்டாடும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம்.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் கமல் இந்தியன் இரண்டாம் பாகத்தில் தீவிரமாக நடித்த வருகின்றார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் லியோ  ஜோஸ் என்போர் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இன்

 

மலையாள படமான மலைக்கோட்டை வாலிபன் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு சிறு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் இதற்கு முன்பாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு மேலாக ஆகி உள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த வாய்ப்பை கண்டிப்பாக கமல் பயன்படுத்துவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை பட குழுவினர் இணையத்தில் வெளியிடவில்லை…

 

Comments are closed.