வில்லனே இல்லாமல் சூப்பர் ஹிட் அடித்த விஜயின் ஐந்து படங்கள்.. அனைத்தும் சாதகமாக அமைந்த படங்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக அனைத்து மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கும் படத்திற்கு சிறப்பான வில்லன் கதாபாத்திரம் என்று கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், ஒரு சில திரைப்படத்தில் மட்டுமே வில்லனே இல்லாமல் சூப்பர் ஹிட் அடித்த படங்களும் இன்று அந்த வகையில் ஐந்து படங்களுக்கு வில்லனே இல்லாமல் சூப்பர் ஹிட் கொடுத்த படம் இருக்கின்றது.

 

அந்த வகையில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குஷி. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படமாகும். இந்த படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே ஈகோ நான் பிரச்சினையாக இருக்கும்.

 

அதனைத் தொடர்ந்து ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய் சூர்யா உயிர் நண்பர்களாக இருந்து வருவார்கள். மேலும், அந்த திரைப்படத்தில் தேவயானி அவரது நண்பர் சூர்யா தவறாக புரிந்து கொள்வார். மேலும், அதனை புரிய வைத்து மீண்டும் நண்பர்களாக சேர்வார்கள்.

 

அந்த படத்தை தொடர்ந்து காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் விஜய் மற்றும் ஷாலினி இருவரும் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் காதல் சம்பந்தமான ஒரு படமாகும்., மேலும் இந்த படத்தில் குடும்பத்திற்காக தங்களுடைய காதலை தியாகம் செய்து அதன் பிறகு அவர்களது குடும்பத்தினர் அதனை புரிந்து கொண்டு இந்த காதலை சேர்த்து வைப்பார்கள்.

 

அந்தப் படத்தை தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும். இந்த திரைப்படத்தில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுறை படமாகவே அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யை தவறாக புரிந்து கொள்ளும் சிம்ரன் கண்பார்வை இழந்து அதன் பிறகு குட்டி என்பவரை காதலித்து வருவார். அந்த கண்பார்வை வந்த பிறகு விஜய் தான்

 

அந்த குட்டி என்று புரிந்து கொண்ட அன்பிறகு அந்த காதல் கைகூடும். அடுத்தபடியாக பூவே உனக்காக இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கீதா நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படமும் காதல் சம்பந்தப்பட்டு அதன் பிறகு இரண்டு குடும்பங்களாக பிரிந்து இருப்பதை சேர்த்து வைத்து

 

தனது காதலுக்காகவே கடைசி வரை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் விஜய் சென்று விடுவார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கும். இப்படி வில்லனே இல்லாமல் வெறும் குடும்பம் மற்றும் காதலை வைத்து நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் படமாக இந்த ஐந்து படங்களும் கொடுத்துள்ளார்…

 

Comments are closed.