அட அந்த படத்தில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்த எம் எஸ் பாஸ்கர். நீங்க நம்பலானாலும் அதான் உண்மை வீடியோவை பாருங்க!!

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில், பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எம்.எஸ்.பாஸ்கர். இவரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திரையுலகில், ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் எம்.எஸ்.பாஸ்கர். பின் ‘திருமதி ஒரு வெகுமதி’ என்கிற படத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பின் சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவருடைய நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ‘அழகி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘கங்கை யமுனா சரஸ்வதி’, ‘செல்வி’ போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம், ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது என்றே கூறலாம்.

இன்றளவும் சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் இவரின் பெயரான பட்டாபி என்ற பெயரை சொன்னாலே இவரை தெரியும்,அந்த அளவுக்கு இவரின் புகழ் அந்த நாடகத்தில் இருந்தது. இவர் அன்று முதல் இன்று வரை பல முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் செய்து வருகிறார் அதில் முக்கியாமாக அப்பாஸ் விக்ரம் பிரபு தேவா என்று நின்று விடாமல் அஜித்துக்கும் டப்ப்பிங் செய்துள்ளார் அஜித் ஆரம்ப காலத்தில் குறும்படங்கள் மற்றும்மாடளிங் தான் செய்து வந்துள்ளார் அப்பப்டியான ஒரு குறும்படத்தில் எம். எஸ். பாஸ்கர் நடிகர் அஜித்துக்கு டப்பிங் செய்துள்ளார் அந்த காட்சியினை கீழே உள்ள வீடியோ வில் காணலாம்

Comments are closed.