பல தொடர்களில் நடித்த கோவை அனுராதாவை ஞாபகம் இருக்கா.? இன்று இவருக்கு இப்படி ஒரு நிலையா.?

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் கோவை அனுராதா என்பவர். இவர் 90களில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார் பல சிறந்த நகைச்சுவை நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தொலைக்காட்சியில் நடித்த நாடகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவர் தமிழகத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர் நகைச்சுவை நடிகர் என பட்டமும் வென்று உள்ளார்.

 

இவர் அது மட்டுமல்லாமல் பல நூல்களையும் எழுதி உள்ளார். நான் பத்து வயதில் இருந்து நடித்து வருகின்றேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், எப்பொழுதும் என்னை சுற்றி பசங்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

 

மேலும், நான் எந்த படத்திற்கு போனாலும் அந்த படத்தை அப்படியே நடித்துக் காட்டி விடுவேன். சினிமாவில் இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இவர்கள் இருவருமே என்னுடைய உயிர். மேலும், இருவருமே இறந்த பிறகு உயிரோடனே இருக்க வேண்டாம் என்று நான் நினைத்து உள்ளேன்.

 

அதன் பிறகு பாலச்சந்தர் சாரோட நாடகத்தை பார்த்து நாடகம் போட ஆசை வந்தது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஏகாம்பரம் என்ற ஒரு நாடகம் போட்டேன். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

மேலும், என்னுடைய நாடகத்தில் ஆபாசமாக எழுத மாட்டேன் பெண்களை மட்டமாக பேசமாட்டேன் நகைச்சுவை மட்டுமே அதிகமாக இருக்கும் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.