என்னது, ரஜினிக்கு நான் வில்லனா.? தயக்கத்தில் பிரபல நடிகர்..!! 50 கோடி சம்பளம் என்று பேசிய நிறுவனம்..!!

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது. எப்பொழுது இவருடைய திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம்.

 

இந்த படத்திலும் நடிகர் ரஜினி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றது. மேலும், அந்த திரைப்படத்தை

 

லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாக கூறி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்கள். முதலில் நடிகர் விக்ரம் வாய்ப்பை மறுத்து விட்டார். அதன் பிறகு ஞானவேல் நடிகர் விக்ரமே நேரில் சந்தித்து கதையை கூறியுள்ளார்.

 

கதையைக் கேட்டவுடன் விக்ரமும் மறுப்பு தெரிவிக்காமல் அவருக்கு பிடித்து விட்டது என்று கூறியுள்ளார். இருந்தாலும் சற்று தயக்கத்துடனே இருந்து வருகின்றார். இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் விக்ரம் மேடம் உடனடியாக பேசி உங்களுக்கு 50 கோடி சம்பளம் தருவதாக கேட்டுள்ளார்கள். சற்று யோசித்துக் கொண்டிருக்கின்றார் நடிகர் விக்ரம்…

 

Comments are closed.