பிரபல நடிகையை உருகி உருகி காதலித்த சரத்குமார்.. பின் சேராமல் போன காதல்..!! வேறு வழியில்லாமல் ராதிகாவை திருமணம் செய்த சரத்குமார்..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்தவர் தான் நடிகர் சரத்குமார் என்பவர். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாக திகழ்ந்து வருகின்றார்.

 

இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக நடித்த மிகவும் பிரபலமானார். அதன் பிறகு வில்லனாகவே நினைத்தால் சினிமாவில் பெரிய இடம் பிடிக்க முடியாது என்று நினைத்து அதன் பிறகு கதாநாயகனாகும் அடிக்க தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் சூரியன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. மேலும், இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் அவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அதன் பிறகு இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் நடிகை நக்மாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

 

அதனால், அவரது மனைவிக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். மேலும், சரத்குமாரும் நடிகை நக்மாவும் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாகவும் ஒரு சில பத்திரிகைகளில் வெளிவந்தது.

 

இருவரும் லிவிங் டுகெதர் என்ற முறைப்படி வாழ்ந்து வந்ததாகும் பிரபல பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு அவருக்கு ஒரு சொகுசு வீடும் சரத்குமார் கட்டிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு இவர்கள் காதல் கைகூடாமல் போன பிறகு நடிகை  ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்…

 

Comments are closed.