ரஜினிக்காக பார்த்து பார்த்து உருவாக்கிய கதை..!! கடைசி நேரத்தில் கதையை நிராகரித்த ரஜினி..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் என்பவர். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து அனைத்து படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விடுதலை.

 

இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று ஓடி வருகின்றது. மேலும், திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் வெற்றிமாறன். நடிகர் ரஜினி பற்றி சில விஷயத்தை பேசி உள்ளார். அது என்னவென்றால் நான் அவரிடம் ஒரு கதையை கூறினேன். ஆனா, அதை அவர் வேண்டாம் என்று நிராகரித்து விட்டுள்ளார்.

 

அதற்கு என்ன காரணம் என்றால் அந்த திரைப்படத்தில் பாலிடிக்ஸ் அதிகமாக இருப்பதால் அவரது வேண்டாம் என்று சொல்லி நிராகரித்து விட்டார் என்று கூறியுள்ளார். மேலும், ஒரு நாவலை அடிப்படையாக வைத்து தான் நான் அந்த கதையை தயார் செய்து உள்ளேன். மேலும், இந்த திரைப்படத்தின் விவசாயிகளின் தற்கொலை அடிப்படையாக வைத்து

 

எழுதிய கதை இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அதன் காரணமாகத்தான் அந்த கதையை நான் தயார் செய்துள்ளேன் என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.