ம னைவி பிள்ளைகளுடன் வாழவேண்டும்என்று சொன்ன நடிகர் பார்த்திபன்..!!கதறி அ ழுது நெகிழ வைத்த காட்சி..!! இதோ நீங்களே பாருங்கள்..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில், இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது.புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட பல்வேறு காரணங்களுக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆகி பிரிந்து விட்டார்கள்.அதன்பிறகு சீதா, ரமேஷ் என்னும் சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் பார்த்திபன் உ யிரோடு திருமணம் செய்யாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நிவர் புயல் மற்றும் சென்னை மழை குறித்து நடிகர் பார்த்திபன் டுவிட்டரில், ”ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும், சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன். அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விட வேண்டும்.

சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு + அர்த்தங்கெட்ட வேகமது. காலை நாலு மணிக்கு எழுந்து வாசலில் வந்து அமர்ந்தேன். நாலா பக்கமும் இடி சத்தம். ஒவ்வொருவரும், வெவ்வேறு நாலா திசையில் எந்த பதட்டமும் இல்லை.என் மகள் கீர்த்தனாவுடன் குறுஞ்செய்தி பகிர்வு. காத்திருந்த கன்று ஒன்று கயிற்றிலிருந்து விடுபட்டு, தாயின் வயிற்றில் முட்டுவது போல என் விரல்கள் தட்ட, அடுத்த முனையில் மகள் கீர்த்தனா.

ஒரு நாயும், மூன்று பூனைகளும் இடி சத்தத்தில் பயந்து ஒளிந்துக் கொள்வதாக வருந்தினார்.(அன்றைய என் நிலையில் இன்று இன்னெருவர்) மரக்கிளைகளில் படும் மழைத்துளிகளின் சப்த பின்னணியில் மனம்+ரணம் இல்லா மரணம் வரை பேசினோம்.அந்நேரம் முதியவர் குளிர் நடுங்க பால் போட வந்தார். பேச்சை நிறுத்தி “டீ குடிச்சிட்டுப் போங்க” என்றேன்.

குனிந்து பாக்கட்டை வைக்காமல் (கூன் இருந்ததால்) நின்ற நிலையிலேயே வைத்தார். ”முடியாத வயசுலேயும் சம்பாதிக்க வேண்டியிருக்கு” ஏன் ஐயா! பசங்க யாருமில்லையா அவர் “நான் கல்யாணமே பண்ணிக்கலயே” என்றார்.நிவர் வருகிறதாம்! வர்தாவை விட வேகத்தில் வருதாம். முன் ஜாக்கிரதை நிவாரன பணிகள் அறிவிக்கப்பட்ட இடங்களிலும் செய்தல் அவசியம். அவசியமின்றி வெளி செல்ல வேண்டாம். கடந்தே தீரும் எதுவும்/இதுவும்” என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.